குதிரை பேரம், நீட் தேர்வு குறித்து கமல்ஹாசன் டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் பிரச்சனைகளில் ஒன்று நீட் தேர்வு. தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசும் மற்ற எதிர்க்கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் இதுகுறித்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அரசு கைவிட்ட போதிலும் இந்த ஆண்டும் மட்டும் விலக்கு வேண்டுமானால் தமிழக அரசு ஒரு அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்றும், அந்த சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கும் என்றும் மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதனையடுத்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவசர சட்டம் இயற்றுவது குறித்து அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே டுவிட்டரில் மூலம் ஆக்கபூர்வமான கருத்துக்களை பதிவு செய்து வரும் உலகநாயகன் கமல்ஹாசன் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியபோது, 'நீட்தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம்.குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம். மாணவர் எதிர்காலம் பற்றியது. தயைகூர்ந்து உடனே பேசுங்கள்' என்று கூறியுள்ளார். இதே கமல்ஹாசன் தான் கடந்த மாதம் 'பள்ளிப் படிப்பை கூட முடிக்காத எனக்கு நீட் தேர்வின் கொடுமை புரியவில்லை' என்று டுவிட்டரில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீட்தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம்.குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம். மாணவர் எதிர்காலம் பற்றியது. தயைகூர்ந்து உடனே பேசுங்கள்
— Kamal Haasan (@ikamalhaasan) August 13, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments