இறந்த காலமாகிவிட்டது ஒரு இளந்தளிர். அனிதா குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்
Send us your feedback to audioarticles@vaarta.com
நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற அனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டதற்கு ஆவேசமாக கண்டனக்குரல் எழுப்பிய நடிகர் கமல்ஹாசன், இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இதுகுறித்து பேசுகிறார்.
இதுகுறித்து சற்றுமுன் வெளியாகியுள்ள புரமோ வீடியோவில், 'எதிர்காலத்தை தொலைத்துவிட்டு, இறந்த காலமாகிவிட்டது ஒரு இளந்தளிர். நான் இந்த மன்றத்தில் பார்க்க போவதை சொல்லவில்ல, மக்கள் மன்றம் பார்க்க மறந்ததை சொல்கின்றேன். இன்றும் சொல்வேன் என்றும் சொல்வேன்' என்று கூறியுள்ளார்.
எனவே இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனிதா மரணம் குறித்தும், அடுத்து மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் கமல் மேலும் விளக்கமாக கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்காலத்தை பொய்த்துவிட்டு..
— Vijay Television (@vijaytelevision) September 2, 2017
இறந்தகாலமாகிவிட்டது ஒரு இளம் தளிர்.. 😥 pic.twitter.com/wrLZs460S9
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments