இறந்த காலமாகிவிட்டது ஒரு இளந்தளிர். அனிதா குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்

  • IndiaGlitz, [Saturday,September 02 2017]

நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற அனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டதற்கு ஆவேசமாக கண்டனக்குரல் எழுப்பிய நடிகர் கமல்ஹாசன், இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இதுகுறித்து பேசுகிறார்.

இதுகுறித்து சற்றுமுன் வெளியாகியுள்ள புரமோ வீடியோவில், 'எதிர்காலத்தை தொலைத்துவிட்டு, இறந்த காலமாகிவிட்டது ஒரு இளந்தளிர். நான் இந்த மன்றத்தில் பார்க்க போவதை சொல்லவில்ல, மக்கள் மன்றம் பார்க்க மறந்ததை சொல்கின்றேன். இன்றும் சொல்வேன் என்றும் சொல்வேன்' என்று கூறியுள்ளார்.

எனவே இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனிதா மரணம் குறித்தும், அடுத்து மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் கமல் மேலும் விளக்கமாக கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

முதல்வர் அறிக்கையில் 'நீட்'டும் இல்லை, நீதியும் இல்லை: நெட்டிசன்கள் கருத்து

நீட் தேர்வை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை போராடிய அனிதா நேற்று பரிதாபமாக தற்கொலை செய்து கொண்டார்....

அனிதாவின் அவசரம் முன்னுதாரணம் அல்ல: நடிகர் விவேக்

அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று பல கோலிவுட் பிரபலங்கள் ஆவேசமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்...

இது ஜனநாயகம் அல்ல, போர்க்களம்: கபிலன் வைரமுத்து

ஜனநாயக நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை கல்வி. அந்த கல்வி மறுக்கப்படுவது அதுவும் ஒரு ஏழை மாணவிக்கு மறுக்கப்படுவது சமூக நீதியை குழிதோண்டி புதைப்பதற்கு சமம்...

பாலியல் தொல்லை: ஓடும் ரயிலில் இருந்து குதித்த சென்னை இளம்பெண்

ஆந்திராவில் ஓடும் ரயிலில் சென்னையை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மூன்று நபர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததால் அவர் ரயிலில் இருந்து குதித்தார். இதனால் படுகாயம் அடைந்த அந்த பெண் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்...

கருணாஸ் கார் கண்ணாடியை நொறுக்கிய மர்ம நபர்கள்: நெல்லையில் பரபரப்பு

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸின் கார் சென்று கொண்டிருந்தபோது அவரது கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...