கமலுடன் முதல்முறையாக இணையும் இயக்குனர் மகேந்திரன்

  • IndiaGlitz, [Sunday,April 17 2016]

'கும்கி' முதல் 'இது என்ன மாயம்' வரை பல வெற்றி படங்களில் நடித்த சிவாஜிகணேசன் குடும்பத்தின் வாரிசு நடிகர் விக்ரம்பிரபு நடித்து வரும் அடுத்த படமான 'வாஹா' திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்கள் நாளை வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் இந்திய எல்லையில் படமாக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவ வீரர் ஒருவருக்கும் பாகிஸ்தான் பெண் ஒருவருக்கும் ஏற்படும் காதல்தான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. விக்ரம்பிரபு, ரான்யா ராய் நடித்துள்ள இந்த படத்தை ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல் நாளை சென்னை சத்யம் திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பாடலை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிடவும் அதை பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் பெற்றுக்கொள்ளவும் இசைந்துள்ளனர். சமீபத்தில் 'தெறி' வில்லனாக நடித்த மகேந்திரன் தற்போது கமலுடன் ஒரு விழாவில் இணைகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.