close
Choose your channels

கமல்-அமலா படத்தின் தமிழ் டைட்டில்

Wednesday, November 25, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தூங்காவனம்' படத்தை அடுத்து கமல்ஹாசன் நடிக்கவுள்ள புதிய படத்திற்கு தெலுங்கில் 'அம்மா நானா ஆட்டா' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே அறிவித்திருந்தோம். இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் டைட்டிலும் தற்போது வெளிவந்துள்ளது.

பிரபல மலையாள இயக்குனர் ராஜீவ் குமார் இயக்கவுள்ள இந்த படத்தில் கமல், அமலா, ஜரீனா வாஹப் மற்றும் பலர் நடிக்கவுள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் தயாராகவுள்ள இந்த படத்தின் தமிழ் பதிப்பிற்கு 'அம்மா அப்பா விளையாட்டு' என்ற டைட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் மலையாளம் மற்றும் இந்தி டைட்டில் விரைவில் முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

'சாணக்யன்' படத்திற்கு பின்னர் 26 வருடங்கள் கழித்து மலையாளத்தில் கமல் நடிக்கவுள்ள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் அமெரிக்காவில் தொடங்கவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment