பட பூஜையே போடல, அதற்குள் இத்தனை கோடி வியாபாரமா? கமல்-எச் வினோத் படத்தின் சாதனை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’கமல் 233’ என்ற படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம். இருப்பினும் இந்த படத்தின் பூஜை கூட போடாத நிலையில் தற்போது இந்த படத்தின் டிஜிட்டல் உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசனின் 233 வது படத்தை எச் வினோத் இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தை ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்றும் சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள் என்றும் விரைவில் இது குறித்து தகவல் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று 125 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
வரும் அக்டோபர் மாதம் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பே இந்த படத்தின் வியாபாரம் தொடங்கி விட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றி, ‘இந்தியன் 2’ படத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஆகியவை தான் ‘கமல் 233’ படத்தின் டிஜிட்டல் உரிமை ரூ.125 கோடிக்கு விற்பனையாக காரணம் என்று கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments