மோடி சந்திப்புக்கும் கமல் பிரிவுக்கும் என்ன சம்பந்தம்? கவுதமி விளக்கம்
- IndiaGlitz, [Friday,November 11 2016]
பிரதமர் மோடியை நடிகை கவுதமி சந்தித்த ஓரிரு நாட்களில் கமலை பிரிவதாக அவர் அறிவித்தது பெரும் சந்தேகத்தை கிளப்பிய நிலையில் இதுகுறித்து பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கவுதமி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கவுதமி, 'பிரிவு எல்லோருக்கும் நிகழ்ந்து விடும். அதனால் இது ஏற்கெனவே எடுத்த முடிவு. பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். இரண்டையும் தொடர்புப் படுத்த வேண்டாம்' என்று கூறியுள்ளார்.
மேலும் ஸ்ருதி, அக்ஷராவுக்கும் எனது முடிவுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அவர்களுக்கு எப்போதும் நான் பக்கபலமாக இருந்துள்ளதால் கருத்துவேறுபாடுக்கு இடமே இல்லை என்றும் கூறினார்.