'விக்ரம்' படம் பார்த்த கமல் ரசிகருக்கு சாதனை விருது: என்ன செய்தார் தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் திரை அரங்குகளில் 100 நாட்கள் ஓடிய இந்தப் படம் சுமார் 450 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை செய்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் ரசிகர்கள் இந்த படத்தை திரும்ப திரும்ப பார்த்து தான் என்பதும் பல ரசிகர்கள் இந்த படத்தை திரையரங்குகளில் இரண்டு முறைக்கும் அதிகமாக பார்த்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ’விக்ரம்’ படத்தை கமல் ரசிகர் ஒருவர் 50 தடவைக்கும் மேல் பார்த்து சாதனை செய்துள்ளார். இந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில் அவரது பெயர் லிங்கன் புக் ஆப் ரிக்கார்ட்ஸ்-இல் இடம் பெற்றுள்ளது. மேலும் இதற்கான சான்றிதழும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சான்றிதழை கமல் ரசிகனான உதய பாரதி என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-க்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனக்கு மனநிம்மதியை தரும் ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.