ஸ்ரீப்ரியாவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்த குடிகார ரசிகர்! தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளராக போட்டியிடுபவர் நடிகை ஸ்ரீபிரியா. இவர் கடந்த சில நாட்களாக மயிலாப்பூர் தொகுதி முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்
இந்த நிலையில் நேற்று ஸ்ரீப்ரியா மயிலாப்பூர் தொகுதியில் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது திடீரென கமல் ரசிகர் ஒருவர் குடிபோதையில் ஸ்ரீப்ரியாவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது. தேர்தல் நேரத்தில் பணம் யாருக்கும் கொடுக்க கூடாது என்றும் அது சட்டப்படி தவறு என்றும் ஸ்ரீபிரியா பொறுமையாக அவருக்கு விளக்கம் அளித்தார். ஆனாலும் அவர் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் அருகில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவரிடம் ஸ்ரீபிரியா புகார் அளித்தார். இதனை அடுத்து அந்த அதிகாரி அந்த நபரை அப்புறப்படுத்தினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
இந்த நிலையில் தனியார் ஊடகம் ஒன்று அந்த நபரை தேடிப்பிடித்து பேட்டி எடுத்தபோது தான் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர் என்றும் சிறுவயதிலிருந்தே கமல்ஹாசன் ரசிகர் என்றும் அவர் நடித்த ’வாழ்வே மாயம்’ திரைப்படம் தனக்கு மிகவும் பிடித்த படம் என்றும் கூறினார். மேலும் தனக்கு உடல் நலம் இல்லாததால் ஸ்ரீபிரியாவிடம் பணம் கேட்கலாம் என்று நினைத்தேன் என்றும் ஆனால் அவர் பணம் தர மறுத்து விட்டதாகவும் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஸ்ரீப்ரியாவிடம் வாழ்வே மாயம் ரசிகன் வம்பு..! ஆத்தா வையும் காசு கொடு..!#Chennai #Mylapore #SriPriya #ElectionCampaign #TNAssemblyElection2021 #TNElection2021 #Election2021 #AssemblyElection2021 https://t.co/v6DtHLGEoi
— Polimer News (@polimernews) March 24, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments