'தேவர் மகன் 2' சாதியை எதிர்க்கும் படமா? கமல் பதில்

  • IndiaGlitz, [Monday,October 15 2018]

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் 'சபாஷ் நாயுடு' திரைப்படம் முதல்கட்ட படப்பிடிப்புடன் நின்றுவிட்டது. மேலும் 'இந்தியன் 2' திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷங்கர் படம் என்பதால் குறைந்தபட்சம் ஒருவருடமாவது இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும், இந்த நிலையில் சமீபத்தில் கமல்ஹாசன் பேட்டி ஒன்றில் 'இந்தியன் 2' படத்திற்கு பின்னர் 'தேவர் மகன் 2' படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவித்தார். அனேகமாக இந்த படத்தின் படப்பிடிப்பு 2020ல் தான் தொடங்கும் என தெரிகிறது.

இந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு கமல்ஹாசன் பேட்டியளித்தபோது 'தேவர் சமுதாயத்திற்கு எதிரான படமா 'தேவர் மகன் 2' என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், 'தேவர்மகன்2' அனைத்து சாதியினருக்கும் எதிரான படம்”என்று கூறியுள்ளார். அனைத்து சாதியினர்களுக்கும் எதிரான ஒரு படத்திற்கு 'தேவர் மகன்' என்ற டைட்டில் தேவையா? என்பதே நெட்டிசன்களின் கேள்வியாக உள்ளது.

மேலும் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பதாகவும், எங்கள் கட்சியில் இணைய விரும்பினால் அவருக்கென்று ஒரு இடம் வழங்கப்படும் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

More News

சபரிமலைக்கு பெண்கள் சென்றால் கூட்டுத்தற்கொலை: சிவசேனா மிரட்டல்

சமீபத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று ஐயப்பனை வழிபடலாம் என சுப்ரீம் கோர்ட் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியது.

14 ஆண்டுகள் கழித்து சின்மயிக்கு பயம் போனது எப்படி? சீமான் கேள்வி

வைரமுத்து விவகாரம் குறித்து 14 ஆண்டுகள் கழித்து சின்மயி பேசியதன் பின்னணியில் அரசியல் இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்

கேரளாவுக்குள் நுழைய கூடாது: பேராயர் பிராங்கோவுக்கு நீதிமன்றம் உத்தரவு

கேரளாவில் கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக பேராயர் பிராங்கோ என்பவர் கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே.

சின்மயி தைரியத்தை பாராட்டுகிறேன்: சரத்குமார்

பாடலாசிரியர் வைரமுத்து மீது சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டு குறித்து ஆரம்பத்தில் திரையுலகினர் கருத்து சொல்லாமல் மெளனமாக இருந்த நிலையில் தற்போது கருத்து சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

சுசி லீக்ஸ் குற்றச்சாட்டுக்கு சின்மயி விளக்கம்

வைரமுத்து மீது சின்மயி பாலியல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒருசிலர் சுசிலீக்ஸில் சின்மயி மீது கூறிய குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூறுமாறு தெரிவித்து வருகின்றனர்.