திமுக பேரணியில் மக்கள் நீதிமய்யம்: கமல் எடுத்த திடீர் முடிவு!

சமீபத்தில் மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக வரும் 23ஆம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணிகள் முக ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த பேரணியில் கலந்துகொள்ள சமீபத்தில் கமலஹாசன் அவர்களுக்கு திமுக சார்பில் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது. கமல்ஹாசன் அவர்களும் உடல்நிலை காரணமாக தான் இந்த பேரணியில் கலந்து கொள்ளாவிட்டாலும், தன்னுடைய கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்று உறுதி அளித்ததாக செய்திகள் வெளியாகி வந்தது.

இந்த நிலையில் சற்று முன்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் கலந்து கொள்ளாது என்றும் அதற்கான காரணத்தையும் நேரில் விளக்கியதாக செய்திகள் வெளிவந்துள்ளது. திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் இந்த பேரணியில் கலந்துகொண்டு கூட்டணிக்கு அஸ்திவாரத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் நிபுணர்கள் கணித்த நிலையில் திடீரென கமல்ஹாசன் எடுத்துள்ள இந்த முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

More News

பாதம் தொட்டு வணங்கினால் மட்டுமே குடியுரிமை: சீமானுக்கு நித்தி நிபந்தனை?

குடியுரிமை சீர்திருத்த சட்டத்தால் எங்களுக்கு குடியுரிமை பறிபோனால் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் எங்கள் தலைவர் நித்தியானந்தா கைலாஷ் என்ற தனி நாட்டை உருவாக்கி இருக்கிறார்

சினிமாக்காரர்கள் கோழைகள், முதுகெலும்பு இல்லாதவர்கள்: விளாசிய பிரபல நடிகை!

திரைத்துறையினர் எதற்கெடுத்தாலும் பயப்படுகிறார்கள் என்றும் அவர்கள் கோழைகள் மற்றும் முதுகெலும்பு இல்லாதவர்கள் என்றும் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளது

80 வயது கிழவியிடம் மோதும் பிரேம்ஜி அமரன்!

நடிகர் பிரேம்ஜி ஹீரோவாக நடிக்க உள்ள ஒரு படத்தில் 80 வயது கிழவி வில்லியாக நடிக்க உள்ள செய்தி தற்போது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

“ஒரு பெற்றோராக, குடிமகனாக கவலை கொள்கிறேன்”- ஹிருத்திக் ரோஷன். #CAA #NRC

நாட்டின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து, ஒரு பெற்றோராக இந்திய குடிமகனாக கவலை கொள்கிறேன் என ஹிருத்திக் ரோஷன் தெரிவித்துள்ளார்.

பீகாரில் எந்த காரணத்திற்காகவும் என்.ஆர்.சி நுழையமுடியாது..! நிதிஷ் குமார்.

என்ஆர்சி ஏன் எதற்காக என கேள்வி எழுப்பியுள்ள பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அதனை அமல்படுத்த மாட்டோம் என கூறியுள்ளார்.