எனக்கு புரியவே இல்லை, பிளாக் ஆவுது.. பூர்ணிமா பிளாக்கை நான் எடுத்து விடட்டுமா? கமல்ஹாசன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
என்னை பற்றி பார்வையாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை, எனக்கு கேமே புரியவில்லை என்று கூறிய பூர்ணிமா, எனக்கு ப்ளாக் ஆகுது, தண்ணீர் குடிச்சிட்டு வரேன் என்று கூற, உங்க பிளாக்கை எப்படி எடுக்க வேண்டும் என்று எனக்கு தெரியும், நான் எடுக்கவா என்று கமல்ஹாசன் கேட்கும் காட்சி இன்றைய ப்ரமோ வீடியோவில் உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி சனி ஞாயிறு மட்டும் கமல் வரும் எபிசோடு என்பதால் கூடுதல் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதும் கமல்ஹாசன் தவறு செய்யும் போட்டியாளர்களை தனது பாணியில் கேள்விகள் கேட்டு கலங்கடிப்பார் என்பதும் தெரிந்ததே.
அந்த வகையில் இன்று வெற்றி நடை போடுபவர் மற்றும் வெட்டி நடை போடுபவர் என்ற இரண்டு பட்டங்கள் யாருக்கு கொடுக்கலாம் என்ற கேள்வி கேட்கப்படுகிறது. அதில் பெரும்பாலானோர் வெற்றி நடை போடுபவர் என அர்ச்சனாவை கூறுகின்றனர்.
இதனை அடுத்து வெட்டி நடை போடுபவர் என்று பூர்ணிமாவை அர்ச்சனா சொல்கிறார். மேலும் அவர் ’நிறைய இடத்துல அவங்க, இவங்கள கெடுக்குறாங்களோன்னு ஃபீல் வருது என மாயாவை குறிப்பிட்டார்.
அப்போது அர்ச்சனா எழுந்து ’என்னை எல்லாரும் எப்படி பார்க்கிறார்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, ஒரு நிமிஷம் சார், நான் தண்ணீர் குடிச்சுட்டு வர்றேன், பிளாக் ஆகுது சார் என்று கூற, அந்த பிளாக்கை உங்களால எடுக்க முடியலனா சொல்லுங்க, நான் எடுத்து விடுறேன் என்று கமல் கூற பூர்ணிமா முகம் அதிர்ச்சி அடைகிறது.
மொத்தத்தில் இன்றைய எபிசோடில் பூர்ணிமா மற்றும் மாயாவுக்கு சில அர்ச்சனைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout