சிவில் சர்வீஸ் தேர்வில் பழங்குடியின பெண் வெற்றி: கமல். ராகுல்காந்தி வாழ்த்து

கடந்த செப்டம்பர், அக்டோபரில் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் 759 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கனிஷக் கட்டாரியா, அக்சித் ஜெயின், ஜூனைத் அகமது ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்றனர். 

இந்த தேர்வில் கேரள மாநிலத்தை சேர்ந்த வயநாடு பகுதியின் பழங்குடியின பெண் ஸ்ரீதன்யா சுரேஷ் என்பவர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். இவருடைய இனத்தில் இருந்து சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் பெண் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதனை செய்திருக்கும் பழங்குடியின பெண் ஸ்ரீதன்யாவுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் ஸ்ரீதன்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் 'ஸ்ரீதன்யாவின் கடின உழைப்பும் அவரது அர்ப்பணிப்பும் கனவை நினைவாக்க உதவியுள்ளது.  தான் தேர்வு செய்யும் பணியில் மிகப்பெரும் வெற்றியை பெற ஸ்ரீதன்யா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்”