என் தகப்பனார் இவருடைய பெரும் ரசிகர்: டிஐஜியின் தாத்தா குறித்து கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Friday,July 17 2020]

எளிமையும் நேர்மையும் ஒன்றிணைந்தவரும், தமிழக அரசியல் அடையாளங்களில் ஒருவருமான முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்களின் அதே எளிமையை உடைய அவருடைய பேத்தி ராஜேஸ்வரி அவர்கள் சமீபத்தில் டிஐஜி ஆக பொறுப்பேற்றார். இதனால் அவருடைய சொந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். மேலும் டிஐஜியாக பொறுப்பேற்ற ராஜேஸ்வரி அவர்களுக்கு தமிழகமு முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தனது தந்தை கக்கன் அவர்களின் பெரும் ரசிகர் என்றும், அவருடைய பேத்தி டி.ஐ.ஜி ஆகப் பொறுப்பேற்றிருப்பது தங்கள் குடுமபத்திற்கு கிடைத்த பெருமை’ என்றும் தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

நேர்மையின் அடையாளமாம் கக்கன் அய்யா அவர்களின் பெரும் ரசிகர் என் தகப்பனார் திரு. D. ஸ்ரீனிவாசன். அவரின் பேத்தி, திருமிகு.ராஜேஸ்வரி அவர்கள் தமிழக டி.ஐ.ஜி ஆகப் பொறுப்பேற்றிருப்பது எங்கள் குடுமபத்திற்கு கிடைத்த பெருமையும் கூட. நாளை நமதாகட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

More News

வடபழனி காவல்நிலைய போலீஸ் விசாரணையில் வனிதா!

வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பால் திருமணம் குறித்த சர்ச்சைகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வரும் நிலையில், வனிதா விஜயகுமார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த சூரியா தேவி

கொரோனாவை கட்டுப்படுத்த இதைக் குடிங்க… ஆயுஷ் அமைச்சகத்தின் முக்கிய அறிவிப்பு!!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை குறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகம் பொது மக்களுக்குப் பல்வேறு வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

ஊரடங்கு நேரத்திலும் முதலீட்டில் கலக்கும் தமிழக அரசு!!! தேசிய அளவில் முதலிடம் பெற்று சாதனை!!!

கொரோனா தாக்கத்தால் இந்தியா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன

பிரதமர் மோடியை அடுத்து திடீரென லடாக் சென்ற பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

கடந்த வாரம் பிரதமர் மோடி லடாக் சென்று ராணுவ வீரர்களிடையே உரையாற்றினார் என்பதும், அப்போது அவர் ராணுவ வீரர்களுக்கு ஒரு திருக்குறளை கூறி ராணுவ வீரர்கள் அனைவரும்

சிட்டுக்குருவிக்காக பைக்கை விட்டுக்கொடுத்த பெண்: நவீன பாரி வள்ளல் என பாராட்டு

பாரி வள்ளல் என்ற மன்னன் முல்லைக் கொடி ஒன்று படர்வதற்கு கொழு கொம்பின்றி இன்றி தவித்த நிலையில் தன்னுடைய தேரை தந்த வள்ளல் தன்மை குறித்து சங்கத்தமிழில் கூறப்பட்டுள்ளது