'விஸ்வரூபம்' பாடலை பாடிய கூலித்தொழிலாளிக்கு கமல் கொடுத்த கெளரவம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல்ஹாசன் நடித்து இயக்கிய 'விஸ்வரூபம்' திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற 'உன்னை காணாத நான்' என்ற பாடலை கமல்ஹாசனும் ஷங்கர் மகாதேவனும் பாடியிருந்தார்கள். இந்த பாடல் சூப்பர் ஹிட் ஆகியது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த தோட்டவேலை செய்யும் கூலித்தொழிலாளி ராகேஷ் உன்னி என்பவர் இந்த பாடலை ஷங்கர் மகாதேவனை போலவே மிக அழகாக பாடிய வீடியோ ஒன்று கடந்த இரண்டு நாட்களாக இணையதளத்தில் வைரலானது. இவரை கண்டுபிடித்து போனில் ஷங்கர் மகாதேவன் பாராட்டியதாகவும் செய்திகள் வெளிவந்தது.
இந்த நிலையில் இந்த பாடலை பாடிய ராகேஷ் உன்னி என்பவரை கமல்ஹாசன் தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்திற்கு வரவழைத்து பாராட்டியதோடு, பத்திரிகையாளர்கள் முன் அவரை பாட வைத்து கெளரவப்படுத்தினார்.
மேலும் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் ராகேஷ் உன்னியை தான் இசையமைக்கும் ஒரு படத்தில் பாட வைப்பதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Power of Social media. Rakesh Unni, a rubber plantation worker,who amazed everyone with his voice, has finally met #KamalHaasan & sung ‘unnai kaanadhu’ song from #Vishwaroopam before him. Kudos to @Shankar_Live for the effort to find him. He certainly has found an amazing singer pic.twitter.com/WNcBFVRRic
— IndiaGlitz™ | Telugu (@igtelugu) July 3, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout