கேரள அரசின் புதிய முயற்சிக்கு கமல்ஹாசன் பாராட்டு
- IndiaGlitz, [Wednesday,February 28 2018]
இந்தியாவிலேயே கேரள மாநிலம் பல விஷயங்களில் முன்னோடியாக இருந்தது போல் மனிதக்கழிவுகளை சுத்தம் செய்யும் ரோபோ இயந்திரத்தை கேரள மாநிலம் இந்தியாவில் முதல் மாநிலமாக அறிமுகம் செய்துள்ளது. இந்த ரோபோ தொழில்நுட்பத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் சமீபத்தில் அறிமுகம் செய்தார்
ஒரே மணி நேரத்தில், 4 சாக்கடைகளை சுத்தம் செய்யும் வகையில், உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோவிற்கு பண்டிகோட் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. வைஃபை மற்றும் ப்ளூட்டூத் வசதியுடன் இயங்கும் இந்த ரோபோவில் சாக்கடைகளை நன்றாக சுத்தப்படுத்துவதற்காக கை போன்ற பகுதியும், அதனை கட்டுப்படுத்துவதற்கான கருவிகளும் பொறுத்தப்பட்டுள்ளன. இந்த ரோபோவை கட்டுப்படுத்துவதற்கான கட்டளைகள் அனைத்தும் ஆங்கில மொழியில் இருந்தாலும் மாநிலங்களுக்கு ஏற்றவாறு மொழியை மாற்றிக்கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கேரள அரசின் இந்த புதிய முயற்சிக்கு நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: கேரளம் இந்தியாவுக்கே அறிமுகப்படுத்தியிருக்கும் மனிதக் கழிவை அகற்றும் ரோபோ இயந்திரம், சகமனிதன்பால் நமக்குள்ள மரியாதையையும் நம் சுயமரியாதையையும் பல படி உயர்த்தியிருக்கிற' என்று கூறியுள்ளார்.
கேரளம் இந்தியாவுக்கே அறிமுகப்படுத்தியிருக்கும் மனிதக் கழிவை அகற்றும் ரோபோ இயந்திரம், சகமனிதன்பால் நமக்குள்ள மரியாதையையும் நம் சுயமரியாதையையும் பல படி உயர்த்தியிருக்கிற.
— Kamal Haasan (@ikamalhaasan) February 28, 2018