கேரள அரசின் புதிய முயற்சிக்கு கமல்ஹாசன் பாராட்டு

  • IndiaGlitz, [Wednesday,February 28 2018]

இந்தியாவிலேயே கேரள மாநிலம் பல விஷயங்களில் முன்னோடியாக இருந்தது போல் மனிதக்கழிவுகளை சுத்தம் செய்யும் ரோபோ இயந்திரத்தை கேரள மாநிலம் இந்தியாவில் முதல் மாநிலமாக அறிமுகம் செய்துள்ளது. இந்த ரோபோ தொழில்நுட்பத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் சமீபத்தில் அறிமுகம் செய்தார்

ஒரே மணி நேரத்தில், 4 சாக்கடைகளை சுத்தம் செய்யும் வகையில், உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோவிற்கு பண்டிகோட்  என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. வைஃபை மற்றும் ப்ளூட்டூத் வசதியுடன் இயங்கும் இந்த  ரோபோவில் சாக்கடைகளை நன்றாக சுத்தப்படுத்துவதற்காக கை போன்ற பகுதியும், அதனை கட்டுப்படுத்துவதற்கான கருவிகளும் பொறுத்தப்பட்டுள்ளன. இந்த ரோபோவை கட்டுப்படுத்துவதற்கான கட்டளைகள் அனைத்தும் ஆங்கில மொழியில் இருந்தாலும் மாநிலங்களுக்கு ஏற்றவாறு மொழியை மாற்றிக்கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கேரள அரசின் இந்த புதிய முயற்சிக்கு நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: கேரளம் இந்தியாவுக்கே அறிமுகப்படுத்தியிருக்கும் மனிதக் கழிவை அகற்றும் ரோபோ இயந்திரம், சகமனிதன்பால் நமக்குள்ள மரியாதையையும் நம் சுயமரியாதையையும் பல படி உயர்த்தியிருக்கிற' என்று கூறியுள்ளார்.

More News

வாழ்க்கை குறித்து மிக எளிமையான விளக்கம் அளித்த விஜய்சேதுபதி

திரையுலகில் எந்தவித பின்புலமும் இல்லாமல் பல்வேறு தோல்விகள் அவமானங்களை சந்தித்து, கடின உழைப்பின் மூலம் மட்டுமே முன்னேறிய ஒருசிலரில் விஜய்சேதுபதியும் ஒருவர்.

ரூ.15,500 கோடி இழப்பு: திவால் ஆகின்றதா ஏர்செல்?

சமீபத்தில் தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளில் திடீரென ஏர்செல் சேவைகள் முடங்கியது. மொபைல்போன் என்பது அனைத்திற்கும் அத்தியாவசியம் என்ற நிலையில் திடீரென ஏர்செல் சேவை

ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதை தருவது சரியா?

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மரணம் இந்திய திரையுலகை மட்டுமின்றி அனைவரையும் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்திய நிலையில் சற்றுமுன் மும்பையில் அவருடைய இறுதி ஊர்வலம் தொடங்கிவிட்டது

'காலா' ரஜினியின் முழுப்பெயர் என்ன தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளது. கோடிக்கணக்கான ரஜினி ரசிகர்கள் இந்த டீசரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

எட்டு மாணவிகளின் எதிர்காலத்தை காப்பாற்றிய காவல்துறை அதிகாரி

தேர்வு எழுத பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த எட்டு மாணவிகளின் எதிர்காலத்தை காப்பாற்றிய ஐதராபாத் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.