இன்று தமிழ் இனம் நன்றி சொல்லும் நாள்: கமல்ஹாசன்
- IndiaGlitz, [Sunday,September 17 2017]
இன்றைய தினம் ஒருபுறம் பாரத பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்த நாளை நாடே கொண்டாடி வரும் நிலையில் இன்னொரு புறம் தமிழக மக்கள் தமிழ் இனத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, சமூக நீதியை காத்த தந்தை பெரியாரின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்
இந்த நிலையில் தந்தை பெரியாரின் கொள்கையை கடைபிடித்து வருபவர்களில் ஒருவரும் பகுத்தறிவாளருமான கமல்ஹாசன் பெரியாரின் பிறந்த நாளுக்கு தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது சமூக வலைத்தளத்தில், 'அவர் செயலை உணர்வை நினைவை போற்றுவோம். 1879,செப்டம்பர் 17ஆம் தேதிக்கு தமிழ் இனம் நன்றி சொல்லும். பெரியார் மறுக்கமுடியாத உண்மை. வாய்மையே வென்றது' என்று கூறியுள்ளார்.
அவர் செயலை உணர்வை நினைவை போற்றுவோம். 1879,செப்டம்பர்17ஆம் தேதிக்கு தமிழ் இனம் நன்றி சொல்லும்.பெரியார் மறுக்கமுடியாத உண்மை. வாய்மையே வென்றது
— Kamal Haasan (@ikamalhaasan) September 17, 2017