'தர்பார்' படத்தின் வசனம் நீக்கம் குறித்து கமல்ஹாசன் கருத்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படம் கடந்த 9ஆம் தேதி உலகம் முழுவதும் சுமார் 7000 திரையரங்குகளில் வெளியாகி தற்போது பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று விறுவிறுப்பாக திரையில் ஓடி வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் சசிகலாவை மறைமுகமாக தாக்கும் வசனமான, ‘பணம் இருந்தால் சிறையில் உள்ளவர்கள் கூட ஷாப்பிங் செல்லலாம்’ என்ற வசனம் இடம் பெற்றிருப்பதாகவும் இதனை நீக்க வேண்டும் என்றும் சசிகலாவின் வழக்கறிஞர் வலியுறுத்தி இருந்தார். இதனை அடுத்து லைக்கா நிறுவனம் இந்த வசனத்தை நீக்க முடிவு செய்து நேற்று முதல் இந்த வசனம் நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த சர்ச்சைக்குரிய வசனம் குறித்தும் இந்த வசனத்தை நீக்கியது குறித்தும் திரையுலக பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து ரஜினியின் 40 ஆண்டு கால நண்பரும் உலகநாயகனுமான கமலஹாசன் இதுகுறித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது ’பராசக்தி படம் வெளியான காலத்தில் இருந்தே கருத்துரிமை பிரச்சனை உள்ளது. அதே போல் தான் ’தர்பார்’ படத்தின் சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்பட்டு இருப்பதும் ஒரு ஷாப்பிங் தான்’ என்று கமலஹாசன் கூறியுள்ளார்.
மேலும் வெற்றிடம் என்ற ஒன்று இல்லை என்றும், மக்கள் மனதில் இடம் உள்ளது என்றும், அதை பிடிப்பது யார் என்பதுதான் கேள்வி என்றும் மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார். அதேபோல் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாதது தனக்கு எந்தவித வருத்தத்தையும் அளிக்கவில்லை என்றும் கமல் கூறினார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments