உஷாவின் கணவருக்கு ஆறுதல் கூறிய கமல்
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்றிரவு திருச்சியில் மூன்று மாத கர்ப்பிணியான உஷா, தனது கணவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் என்பவர் எட்டி உதைத்ததால் கீழே விழுந்து பரிதாபமாக மரணம் அடைந்தார். அவரது கணவர் ராஜா காயங்களுடன் உயிர் தப்பி சிகிச்சை பெற்று வருகிறார்.
உஷாவை காதலித்து இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட ராஜா, தன்னுடைய குடும்பத்தின் முதல் வாரிசை இன்னும் ஒருசில மாதங்களில் பார்த்துவிடலாம் என்ற கனவுடன் இருந்த நிலையில் அவரது கனவை ஒரே நிமிடத்தில் பறித்துவிட்டார் ஆய்வாளர் காமராஜ். மனைவியின் மரணத்தை நினைத்து மருத்துவமனையில் கதறி அழுது வரும் ராஜாவுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் அவரது உறவினர்கள் திகைத்து போயுள்ளனர்
இந்த நிலையில் மக்கள் நீதி கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன், தொலைபேசி மூலம் உஷாவின் கணவர் ராஜாவுக்கு ஆறுதல் கூறியுள்ளார். ராஜாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்றபோதிலும் கமலின் ஆறுதல் அவருக்கு ஒருவகையில் மனதைரியத்தை கொடுக்கும் என்று நம்புவோம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments