மோடி, ஜெகன்மோகன் ரெட்டி அரசியல் பாணியில் இருந்து விலகிய கமல்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமலஹாசன் சமீபத்தில் மக்கள் நீதி மையம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற மக்களவை தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டார். அவரது கட்சி வேட்பாளர்கள் தமிழகத்தின் எந்த தொகுதியில் வெற்றி பெறவில்லை என்றாலும் ஒரு குறிப்பிட்ட சதவீத ஓட்டுக்களை வாங்கியதால் அக்கட்சியினர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது
இந்த நிலையில் வரும் 2021 ஆம் ஆண்டு வரும் தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க திட்டமிட்ட கமலஹாசன் அகில இந்திய அளவில் அரசியல் வியூகங்களை வகுத்துக் கொடுக்கும் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிறுவனத்தின் ஆலோசனையின் பேரில்தான் குஜராத் முதல்வராக மோடியும், ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டியின் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் கமல் கட்சிக்கும் இந்நிறுவனம் தகுந்த ஆலோசனைகளை கொடுத்து கமல் கட்சியை ஆட்சி பொறுப்பில் அமர வைக்கும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது ஐபேக் நிறுவனத்துடன் மக்கள் நீதிமன்றம் செய்து கொண்ட ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள கமல்ஹாசன் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
இதுவரை ஐபேக் நிறுவனம் கொடுத்த ஆலோசனைகள் கமலஹாசனுக்கு திருப்தி இல்லாததால் அந்நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஐபேக் நிறுவனத்துடன் அதிமுக தரப்பில் இருந்தும் ரஜினிகாந்த் தரப்பில் இருந்தும் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் தற்போது கமல்ஹாசன் விலகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout