அனுமதி மறுத்தாலும் பரப்புரை தொடரும்! கமல்ஹாசன்
- IndiaGlitz, [Friday,May 17 2019]
மல்ஹாசன் இன்று சூலூர் தொகுதியில் தேர்தல் பரப்புரை செய்ய போலீசார் அனுமதி மறுத்துள்ள நிலையில், அனுமதி மறுத்தாலும் எனது பரப்புரை தொடரும் என்று டுவிட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டு அதன்மூலம் பரப்புரை செய்துள்ளார்.
நான் பரப்புரை செய்ய எனக்கு ஒரு ஊரில் அனுமதி மறுக்கப்பட்டது. விஞ்ஞானத்திற்கு நன்றி. இதோ என் பரப்புரை தமிழ்நாடு காண.. என்ற முன்னுரையுடன் கமல் இந்த வீடியோவில் கூறியதாவது:
ஒட்டப்பிடாரம் பகுதிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்றபோது காளியப்பன் என்பவரது வீட்டுக்கு சென்றேன். ஆனால் காளியப்பன் வீட்டில் இல்லை. கடந்த ஆண்டு தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களில் ஒருவர் தான் இந்த காளியப்பன் என்று கமல் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
மேலும் அந்த வீடியோவில், '23ஆம் தேதிதான் ஓட்டு எண்ணிக்கை, அதே 23ஆம் தேதி தான் என் மகனின் நினைவு நாள் என்று காளியப்பனின் தாய் கூற, எங்க அண்ணனை குருவி சுட்ட மாதிரி சுட்டுட்டாங்க என்று இரண்டு தங்கைகள் கதறி அழும் காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளது.
தூத்துகுடி கலவரத்திற்கு காரணமானவர்கள் அப்படி ஒரு சம்பவமே நடக்காதது போல் மீண்டும் அதே பகுதிக்கு சென்று ஓட்டுப்பிச்சை கேட்கின்றார்கள் என்றும், அவர்களை புறந்தள்ளிவிட்டு மாற்றத்திற்கு மக்கள் தயாராக வேண்டும் என்றும் கமல் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
நான் பரப்புரை செய்ய எனக்கு ஒரு ஊரில் அனுமதி மறுக்கப்பட்டது. விஞ்ஞானத்திற்கு நன்றி. இதோ என் பரப்புரை தமிழ்நாடு காண.... pic.twitter.com/MsEsNQbhLB
— Kamal Haasan (@ikamalhaasan) May 17, 2019