என் அன்புத் தம்பி விஜய்: கமல்ஹாசனின் பிறந்த நாள் வாழ்த்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
என் அன்பு தம்பி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என உலக நாயகன் நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்
தளபதி விஜய்யின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலர் தங்களுடைய சமூக வலைதளங்களிலும், நேரிலும் தொலைபேசியிலும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் உலக நாயகன் கமலஹாசன் ஒவ்வொரு ஆண்டும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதை அடுத்து இந்த ஆண்டும் அவர் தனது டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தன் திறமையாலும் அன்பாலும் தமிழ் உள்ளங்களை வசீகரித்துள்ள என் அன்புத் தம்பி விஜய்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
தன் திறமையாலும் அன்பாலும் தமிழ் உள்ளங்களை வசீகரித்துள்ள என் அன்புத் தம்பி @actorvijayக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) June 22, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments