இசைக்கு இளைஞர், மனதிற்கு கிளைஞர்: இசைஞானிக்கு கமல் வாழ்த்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்றைய இசைஞானி இளையராஜா அவர்கள் தனது 77வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் உள்பட பலர் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். சின்ன குயில் பாடகி சித்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் பாடலைப்பாடி இளையராஜா பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பதை பார்த்தோம்
இந்த நிலையில் சற்று முன்னர் உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இசைஞானிக்கு தனது வாழ்த்தை தெரிவித்து உள்ளார். அவர் தனது டுவிட்டரில் இது குறித்து கூறியிருப்பதாவது:
இசைக்கு இளைஞர் இளையராஜா.என் மனதுக்குக் கிளைஞர். உணர்வுகளில் உறவாய் இருப்பவர். சம்பவங்களை ஸ்வரங்களாய் மொழிபெயர்ப்பவர். பல கோடி மனங்களை கண்டக்ட் செய்யும் மேஸ்ட்ரோவிற்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இசைக்கு இளைஞர் இளையராஜா.என் மனதுக்குக் கிளைஞர்.உணர்வுகளில் உறவாய் இருப்பவர்.சம்பவங்களை ஸ்வரங்களாய் மொழிபெயர்ப்பவர். பல கோடி மனங்களை கண்டக்ட் செய்யும் மேஸ்ட்ரோவிற்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். pic.twitter.com/pUkhf65G9h
— Kamal Haasan (@ikamalhaasan) June 2, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com