தமிழக அரசியல் களம் உங்களைக் காணக் காத்திருக்கிறது: கமல் வாழ்த்து கூறியது யாருக்கு?

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இன்று காலை முதல் தொடர்ச்சியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் ஆகியோரும் விஜயகாந்துக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் தனது சமூக வலைப்பக்கத்தில் விஜயகாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் அதில் கூறி இருப்பதாவது: 'தமிழக அரசியல் களம் மீண்டும் முழு வீச்சில் உங்களைக் காணக் காத்திருக்கிறது; மக்கள் பணியைத் தொடர வாழ்த்துக்கள் நண்பர் விஜயகாந்த் அவர்களே’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கட்சி ஆரம்பிக்கும் முன் கமலஹாசன் பல அரசியல் பிரபலங்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பதும், அவ்வாறு வாழ்த்து பெற்றவர்களில் ஒருவர் விஜயகாந்த் என்பதும் குறிப்பிடத்தக்கது.