கமல் பிறந்த நாளில் வரும் 'தக்லைஃப்' இதுதான்.. 48 விநாடிகளில் ஒரு விருந்து..!

  • IndiaGlitz, [Wednesday,November 06 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து முடித்துள்ள ‘தக்லைஃப்’ படத்தின் முக்கிய அப்டேட் நவம்பர் 7ஆம் தேதி, அதாவது நாளை, கமல்ஹாசனின் பிறந்த நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் நாளை வெளியாக உள்ள வீடியோ குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவாகியுள்ள ‘தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு 48 வினாடிகள் கொண்ட டீசர் விருந்து தயாராக இருப்பதாகவும், அந்த டீசரின் சென்சார் பணிகளும் முடிந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

மேலும், இந்த டீசர் வீடியோவில் இறுதியில் ‘தக்லைஃப்’ படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், நாளை கமல்ஹாசனின் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக வரவிருக்கும் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்றும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், அலி ஃபைசல், பங்கஜ் திரிபாதி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.