அரசியலில் ஆரம்பப் பள்ளியில் இருக்கின்றார்: கமல் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி விமர்சனம்

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் ஆட்சி புரிந்து வரும் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகரும், அம்மாநில முதலமைச்சருமான பினராயி விஜயன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு நெருக்கமானவராக இருந்து வரும் நிலையில் அக்கட்சியின் தமிழக பிரமுகர் ஒருவர் கமல்ஹாசனை விமர்சனம் செய்து பேசியுள்ளார்.

திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து பிரச்சாரம் செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் பேசியபோது, 'அரசியலில் கமல்ஹாசன் ஆரம்பப் பள்ளியில் இருப்பதாகவும், அவர் மத்திய அரசின் ஜிஎஸ்டி பற்றி ஒருவார்த்தை கூட பேசவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் களத்தில் கமல்ஹாசனை அதிமுக, திமுக, உள்பட பல அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வந்த நிலையில் தற்போது அவருக்கு நெருக்கமான மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அவரை விமர்சனம் செய்திருப்பது ஆச்சரியத்தை தருவதாக உள்ளது