பிரச்சாரத்தின்போது எருமை மாடுகளிடம் மன்னிப்பு கேட்ட கமல்ஹாசன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் - நடிகைகளின் பிரசாரத்திற்கு கூடும் கூட்டம், வாக்காக மாறாது என்றும், மதுரையில் எருமை மாட்டை குளிப்பாட்டினால் கூட மக்கள் கூட்டம் கூடும் என்று சமீபத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதே எருமைகள் குறித்து கமல்ஹாசன் பேசியதாவது:
எருமை மாட்டை குளிப்பாட்டினால் கூட கூட்டம் சேரும்; நடிகனுக்கும் அப்படித் தான் கூட்டம் சேரும்' என்கின்றனர். நீங்களும், நடிகனை வைத்து தான், கட்சி ஆரம்பித்தீர்கள் என்பதை மறந்து விட்டீர்கள். குளிப்பாட்ட வேண்டிய எருமை மாடுகள், எங்கேயோ உள்ளன. அவர்களை, நீங்கள் கண்டிப்பாக குளிப்பாட்டியே தீர வேண்டும். நான், யாரையும் அப்படி சொல்லவில்லை. எனக்கு எருமை மாடுகள் மீது, மிகுந்த மரியாதை உண்டு. அதனால், மாண்புமிகு எருமை மாடுகள், என்னை மன்னிக்க வேண்டும். ஏனெனில், அவை பால் தரும்; சாணமிடும். அவற்றால், மக்களுக்கு ஏதாவது பலன் உண்டு. அதனால், அவற்றிடம் மன்னிப்பு கேட்கிறேன்.
நான், கோபத்தில் தான் அரசியலுக்கு வந்தேன். மக்களுக்காக, ஏதாவது செய்து, மடிந்தவர்கள் கூட்டத்தில் ஒருவனாக, உங்கள் மனங்களில் வாழ ஆசைப்படுகிறேன்.அதற்கான போராட்டத்தில், என் தொழிலோ, பணமோ, எனக்கு பெரிதாக தெரியவில்லை. நான், அரசியலுக்கு காலதாமதமாக வந்தது தான் எனக்கு வருத்தம்.
இன்னும், சீக்கிரமாக வந்திருக்க வேண்டும். பரவாயில்லை, இனி விட்டதை பிடிக்க, வேகமாக வேலை செய்வேன். என் வாழ்நாளை, உங்களுக்காக ஒதுக்கி விட்டேன். இங்கு, 50 ஆண்டாக ஆட்சி செய்தவர்கள், அவர்களது குடும்பங்களுக்காக மட்டும் உழைத்தனர். இப்போது, ஒருத்தர் போட்டு வைத்த, இரட்டை இலையில், வேறு இருவர் சாப்பிடுகின்றனர். அதுவும், அவர்களின் குடும்பங்களுக்காக என்றாகி விட்டது. இந்த குறைகளை, உடனே தீர்த்து விட முடியாது. ஆனால், என்றாவது ஒரு நாள் தீரும். இவ்வாறு கமல் பேசினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout