ஜெயலலிதா விழா நடத்தலாம், இதை மட்டும் நடத்தக் கூடாதா? கமல்ஹாசன் கேள்வி
- IndiaGlitz, [Tuesday,January 26 2021]
குடியரசு நாள் கொண்டாடலாம், ஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா? என உலக நாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் காந்தி பிறந்த நாள், சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கிராமசபை கூட்டத்தை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியதில் கமல்ஹாசனுக்கு பெரும்பங்கு உண்டு. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சரி, தனது கட்சியின் சார்பிலும் சரி கிராமசபை கூட்டத்தின் அவசியத்தையும் பயன்களையும் அவர் தொடர்ந்து கூறி வருகிறார்
இந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணத்தால் கிராமசபை கூட்டம் நடத்த தமிழக அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பதும் இந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கிராமசபை கூட்டம் குறித்து சற்றுமுன் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; கிராம சபைக் கூட்டங்கள் நடத்தக்கூடாது என்று அறிவித்திருக்கிறது தமிழக அரசு. கோவிட் காரணம் காட்டியிருக்கிறது. குடியரசு நாள் கொண்டாடலாம், ஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா? உண்மையில் இந்த அரசு யாருக்கு பயப்படுகிறது?
கிராம சபைக் கூட்டங்கள் நடத்தக்கூடாது என்று அறிவித்திருக்கிறது தமிழக அரசு. கோவிட் காரணம் காட்டியிருக்கிறது. குடியரசு நாள் கொண்டாடலாம், ஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா? உண்மையில் இந்த அரசு யாருக்கு பயப்படுகிறது?
— Kamal Haasan (@ikamalhaasan) January 26, 2021