கமல்-லோகேஷ் கனகராஜின் 'விக்ரம்' படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

’மாநகரம்’ ’கைதி’ மற்றும் ’மாஸ்டர்’ ஆகிய மூன்று வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் டிரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்து, படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் மே மாத மத்தியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் லோகேஷின் ‘விக்ரம்’ படத்தின் திரைக்கதை முழுவதையும் படித்த கமல்ஹாசன் அதில் ஒரு சில மாற்றங்கள் செய்ய கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு லோகேஷ் கனகராஜ் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக பகத் பாசில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.