கமல்ஹாசனின் வேண்டுகோளை ஏற்குமா லைகா நிறுவனம்

  • IndiaGlitz, [Saturday,January 30 2016]

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று 'வெற்றிமாறன்' இயக்கிய 'விசாரணை' படத்தின் சிறப்பு காட்சியை பார்த்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். கமலுடன் இந்த படத்தை ரிலீஸ் செய்யும் லைகா நிறுவனத்தின் நிர்வாகி ராஜூமகாலிங்கம் அவர்களும் இணைந்து இந்த படத்தை பார்த்தார்.


இந்நிலையில் படம் பார்த்து முடித்தவுடன் ராஜூமகாலிங்கம் கமல்ஹாசனுடன் படம் பார்த்த அனுபவம் குறித்து கூறியபோது, 'விசாரணை திரைப்படம் கமலுக்கு மிகவும் பிடித்திருந்தது. இயக்குநர் வெற்றிமாறனிடம் படம் பற்றிய தன்னுடைய கருத்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். என்னிடம் கமல் பேசியபோது, "நீங்கள் பல பெரிய படங்களைத் தயாரித்தாலும் இதுபோன்ற சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நல்ல படங்களின் மீது அவர் காட்டும் அக்கறை அதில் தெரிந்தது' என்று கூறினார்.

கமல்ஹாசனின் வேண்டுகோளின்படி லைகா நிறுவனம் '2.0' போன்ற பெரிய படங்கள் மட்டுமின்றி நல்ல தரமான சின்ன பட்ஜெட் படங்களையும் தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.