தமிழக அரசை விட 3 லட்சம் அதிகம்: கமல் அதிரடி அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
திருச்சி அருகேயுள்ள திருவெறும்பூரில் நேற்று இரவு போக்குவரத்து காவல்துறை அதிகாரி காமராஜ் என்பவரால் எட்டி உதைக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த உஷா என்ற பெண்ணின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்ததோடு, அவரது குடும்பத்திற்கு நிவாரண நிதியாக ரூ.7 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்
இந்த நிலையில் இன்று சென்னையில் நடைபெற்று வரும் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் மகளிர் தின பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், உஷாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி செய்வதாக அறிவித்துள்ளார். கட்சி ஆரம்பித்து ஒருசில நாட்களே ஆனாலும் தமிழக அரசை விட அவர் கூடுதலாக ரூ.3 லட்சம் நிதியுதவி செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இன்று மதியம் கமல்ஹாசன் அவர்கள், உஷாவின் கணவர் ராஜாவுக்கு தொலைபேசி மூலம் ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout