நவம்பர் 7ல் முக்கிய அறிவிப்பு: கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Thursday,October 26 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே பரபரப்பான அரசியல் கருத்துக்களை டுவிட்டரிலும் பேட்டியிலும் கூறி வந்தார். அவருடைய விமர்சனத்திற்கு தமிழக முதல்வரும் தப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசனின் ஒவ்வொரு டுவிட்டுக்கும் மக்களின் பேராதரவு இருந்ததை அடுத்து விரைவில் அரசியல் களத்தில் நேரடியாக இறங்கவுள்ளதாக கமல்ஹாசன் அறிவித்தார்.

இந்த நிலையில் வரும் நவம்பர் 7ஆம் தேதி தனது பிறந்த நாளில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். நம் இயக்கத்தார் என்னுடனும், மக்களுடனும் தொடர்பு கொள்ள வசதியாக ஏற்பாடுகள் நடப்பதாகவும், தமிழகத்திற்கு கடமை செய்ய நினைப்பவர்களை இருகரம் கூப்பி வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதே நவம்பர் 7ஆம் தேதிதான் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் எழுச்சிப்பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார். அதுமட்டுமின்றி இந்த தினத்தில்தான் 2G வழக்கின் தீர்ப்பு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நவம்பர் 7ஆம் தேதி தமிழகத்தில் பரபரப்புக்கும் பிரேக்கிங் செய்திகளுக்கும் பஞ்சமிருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ரஜினி, கமலை விட விஜய்யின் உள்கட்டமைப்பில் பலம் அதிகம்: எஸ்.வி.சேகர்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ள நிலையில் இந்த படம் குறித்து கருத்து தெரிவிக்காத அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்களே இல்லை என்று கூறலாம்

'தளபதி 62' படத்தின் ஒளிப்பதிவாளர் யார் தெரியுமா?

கடந்த தீபாவளி அன்று வெளியான 'தளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்தின் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த செய்திகள் வெளிவர தொடங்கிவிட்டது.

'பாகுபலி' இசையமைப்பாளருடன் இணைந்த ஆஸ்கார் நாயகன்

எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி மற்றும் 'பாகுபலி 2' படங்களின் வெற்றிக்கு காரணமானவர்களில் ஒருவர் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவானி என்பது மறுக்க முடியாத உண்மை.

'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் சந்தானம் நாயகி

சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் படமான 'ஹரஹர மகாதேவகி' படத்தை அடுத்து ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' என்பது அனைவரும் அறிந்ததே.

மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியாது: முதல்வரின் அதிரடி முடிவு

மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் நாடு முழுவதும் உள்ள மக்களிடம் வலியுறுத்தி வருகிறது. வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இந்த இணைப்பு நடைபெற வேண்டும்