தமிழகத்துக்குள்தான் விழுப்புரம் ஒட்டனேந்தல் இருக்கிறதா? கமல்ஹாசன் டுவிட்
Send us your feedback to audioarticles@vaarta.com
விழுப்புரம் அருகே ஒட்டனேந்தல் என்ற கிராமத்தில் தலித் பெரியவர்களை காலில் விழ வைத்த சம்பவத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் இந்த சம்பவம் குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் தமிழகத்தில்தான் விழுப்புரம் ஒட்டனேந்தல் இருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்
விழுப்புரம் மாவட்டம் ஒட்டனேந்தல் என்ற பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்கள் ஊரடங்கை மீறி திருவிழா நடத்தியதால் ஊரார் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என அங்கு உள்ள பிற சாதியை சேர்ந்தவர்கள் கூறியதாகவும், இதனை அடுத்து பட்டியல் இனத்தைச் சேர்ந்த நான்கு பெரியவர்கள் காலில் விழுந்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரல் ஆன நிலையில் பலர் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்
அந்த வகையில் தற்போது கமல்ஹாசன் தனது டுவிட்டரில் இது குறித்து தனது கண்டனத்தை பதிவு செய்து உள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: இந்தியர் யாவரும் என் உடன்பிறந்தோர் என்று உறுதிமொழி எடுக்கும், குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று மனப்பாடப் பாட்டு கற்பிக்கும் தமிழகத்துக்குள்தான் விழுப்புரம் ஒட்டனேந்தல் இருக்கிறதா? திருவிழா கொண்டாடியதற்காக சக மனிதரைக் காலில் விழவைக்கும் கலாச்சாரம் அருவருக்க வைக்கவில்லையா? இம்முறையே இறுதி முறையாக இருக்கட்டும். அரசின் தலையீடு வலுவானதாக அமையட்டும்
திருவிழா கொண்டாடியதற்காக சக மனிதரைக் காலில் விழவைக்கும் கலாச்சாரம் அருவருக்க வைக்கவில்லையா? இம்முறையே இறுதி முறையாக இருக்கட்டும். அரசின் தலையீடு வலுவானதாக அமையட்டும். (2/2)
— Kamal Haasan (@ikamalhaasan) May 16, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments