மிக மோசமான கண்டுபிடிப்பு, ஸ்லோ பாய்சன்: கமல், யுவன்சங்கர் ராஜா கருத்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிகவும் மோசமானது என்று கமல்ஹாசனும் உடம்பிற்கு ஸ்லோ பாய்சன் என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் அடுத்தடுத்து தங்கள் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் வைரலாகி வருகிறது
இன்று மே 31 ஆம் தேதியான இன்று உலக புகையிலை ஒழிப்பு தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை அடுத்து உலக சுகாதார மையம் முதல் பல்வேறு சமூக ஆர்வலர்கள் புகையிலைக்கு எதிரான தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் திரையுலகின் முக்கிய பிரபலங்களான உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் தங்களுடைய டுவிட்டரில் இது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்
கமல்ஹாசன் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியதாவது: மனிதனின் கண்டுபிடிப்புகளில் மோசமான ஒன்று புகையிலை. அதன் போதையால் எந்த பயனும் இல்லை. ஆனாலும் எல்லா வகைகளிலும் அதைப் பயன்படுத்துகிறார்கள். உலகப் புகையிலை ஒழிப்பு நாளான இன்றேனும் அந்தப் பழக்கத்தை விடுவது பற்றி யோசிப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியதாவது: நீங்கள் புகை பிடிப்பதால் உங்களுடைய உடம்பிற்கு ஸ்லோ பாய்சனை ஏற்றிக் கொள்வதோடு மட்டுமின்றி உங்களை சூழ்ந்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறீர்கள். குறிப்பாக குழந்தைளுக்கும் இதன்மூலம் பாதிப்பு ஏற்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்த ஒரு புகைப்படம் ஒன்றையும் அவர் இணைத்துள்ளார்.
மனிதனின் கண்டுபிடிப்புகளில் மோசமான ஒன்று புகையிலை. அதன் போதையால் எந்த பயனும் இல்லை. ஆனாலும் எல்லா வகைகளிலும் அதைப் பயன்படுத்துகிறார்கள். உலகப் புகையிலை ஒழிப்பு நாளான இன்றேனும் அந்தப் பழக்கத்தை விடுவது பற்றி யோசிப்போம்.
— Kamal Haasan (@ikamalhaasan) May 31, 2021
Today is THE WORLD NO TOBACCO DAY !
— Raja yuvan (@thisisysr) May 31, 2021
When you smoke, not only you harm your body with the slow poison but also endanger everyone around,
including children who become PASSIVE SMOKERS!#WorldNoTobaccoDay#NoSmoking#NoDrugs pic.twitter.com/HvVClowaM6
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments