எனக்கு பிடித்த நபர்களை இழந்து வருகிறேன்.. பவதாரிணி மறைவு குறித்து விஷால்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில வாரங்களாக எனக்கு பிடித்த நபர்களை இழந்து வருகிறேன், இது வாழ்க்கை மீதான என் தவறான புரிதலை உணர்த்துகிறது என நடிகர் விஷால், பாடகி பவதாரிணி மறைவு குறித்து பதிவு செய்துள்ளார். அவர் மேலும் இதுகுறித்து கூறியதாவது:
அன்பு பவதா, நான் இதை மிகவும் கனத்த இதயத்துடன் எழுதுகிறேன், உங்களை இளையராஜாவின் மகளாகவோ, யுவனின் சகோதரியாகவோ பார்த்தை விட, என்னுடைய சொந்த சகோதரி போலவே எண்ணினேன். உங்களை போன்ற ஒரு நல்ல ஆத்மா எங்களை விட்டு வெகு சீக்கிரமாக பிரிந்துவிட்டது.
கடந்த சில வாரங்களாக எனக்கு பிடித்த நபர்களை இழந்து வருகிறேன், இது வாழ்க்கை மீதான என் தவறான புரிதலை உணர்த்துகிறது, உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் என உருக்கமாக பதிவு செய்துள்ளார்.
அதேபோல் உலக நாயகன் கமல்ஹாசன் தனது இரங்கல் செய்தியில், மனம் பதைக்கிறது. அருமைச் சகோதரர் இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் கைகளை மானசீகமாக பற்றிக்கொள்கிறேன். பவதாரிணியின் மறைவு பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று. இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும். பவதாரிணியின் குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த இரங்கல்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Dear Bavatha. I write this with a heavy heart and unable to digest it. Am really sorry you are not going to be with us anymore and left us to be with the gods. I miss u as a sister, as my own, more than I knew you as Ilayaraja sir’s daughter or Yuvan’s sister or Vasuki’s cousin.…
— Vishal (@VishalKOfficial) January 26, 2024
மனம் பதைக்கிறது. அருமைச் சகோதரர் இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் கைகளை மானசீகமாகப் பற்றிக்கொள்கிறேன். பவதாரிணியின் மறைவு பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று. இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும். பவதாரிணியின்…
— Kamal Haasan (@ikamalhaasan) January 26, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments