கேரள முதல்வருக்கு கமல், விஜய்சேதுபதி நன்றி
- IndiaGlitz, [Thursday,November 29 2018]
தமிழகத்தில் கடந்த 16ஆம் தேதி கஜா புயல் தாக்கி பலத்த சேதங்களை உண்டாக்கிய நிலையில் தமிழகத்தில் இருந்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து புயல் நிவாரண நிதி குவிந்து வருகிறது. அந்த வகையில் நமது அண்டை மாநிலமான கேரளாவின் முதல்வர் பினராயி விஜயன், தமிழகத்திற்கு புயல் நிவாரண நிதியாக ரூ.10 கோடி அறிவித்துள்ளார்.
கேரள முதல்வரின் இந்த அறிவிப்புக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் 'கஜா புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு கேரள அரசு சார்பாக ரூபாய் 10 கோடியை அளித்தற்கு கேரள முதல்வர் அவர்களுக்கு நன்றி. வேண்டுகோள் வைத்த 24 மணி நேரத்திற்குள் துரிதமாக நடவடிக்கை எடுத்த உங்கள் செயல்பாடு மனிதத்தின் வெளிப்பாடு! என்று கூறியிருந்தார். முன்னதாக நேற்று கேரள முதல்வருக்கு கமல் கஜா புயல் நிதி வழங்கி உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் நடிகர் விஜய்சேதுபதியும் தனது டுவிட்டர் பக்கத்தில் கேரள முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: புயல் தாக்கிய அடுத்த நாளே நிவாரணப் பொருட்களை அனுப்பியதோடு இன்று தமிழர்களின் துயரை துடைக்கும் விதத்தில் தற்போது 10 கோடி ரூபாய் நிதியையும் அறிவித்த கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் அவர்களின் சகோதரத்துவ மனிதம் கண்டு மகிழ்ச்சியோடும் நன்றிகளோடும் வணங்குகிறேன் என்று கூறியுள்ளார்.
கஜா புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு கேரள அரசு சார்பாக ரூபாய் 10 கோடியை அளித்தற்கு @CMOKerala அவர்களுக்கு நன்றி. வேண்டுகோள் வைத்த 24 மணி நேரத்திற்குள் துரிதமாக நடவடிக்கை எடுத்த உங்கள் செயல்பாடு மனிதத்தின் வெளிப்பாடு!
— Kamal Haasan (@ikamalhaasan) November 28, 2018
புயல் தாக்கிய அடுத்த நாளே நிவாரணப் பொருட்களை அனுப்பியதோடு இன்று தமிழர்களின் துயரை துடைக்கும் விதத்தில் தற்போது 10 கோடி ரூபாய் நிதியையும் அறிவித்த கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் அவர்களின் சகோதரத்துவ மனிதம் கண்டு மகிழ்ச்சியோடும் நன்றிகளோடும் வணங்குகிறேன்...
— VijaySethupathi (@VijaySethuOffl) November 29, 2018