அரசியல் அவரை இழந்துள்ளது, போய் வாருங்கள் பிரணாப்! கமல், வைரமுத்து இரங்கல்
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி சற்றுமுன் உடல்நலக்கோளாறால் காலமானதாக அறிவிக்கப்பட்டது. அவருடைய மறைவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் கவியரசர் வைரமுத்து ஆகியோர் தங்கள் சமூக வலைத்தளங்களில் பிரணாப் முகர்ஜி மறைவு குறித்து தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘இந்தியாவின் 13 வது ஜனாதிபதியாக வருவதற்கு முன்பே வெளிநாட்டு, பாதுகாப்பு, வர்த்தக மற்றும் நிதி அமைச்சராக இருந்தவர் என்பதும், அவர் 5 தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த தனது புகழ்பெற்ற அரசியல் பயணம் செய்தவர். அவர் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி. அரசியல் அவரை இழந்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் கவியரசர் வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் பிரணாப் மறைவு குறித்து கூறியதாவது:
பிரணாப் முகர்ஜி மறைவுக்கு
இந்தியா எழுந்து நின்று மெளனிக்கிறது.
உழைப்பில் உறங்காப்புலி இறுதியாய்
உறங்கிவிட்டது.
பாரதத்தின் உயரங்களை வளர்த்தெடுத்த
பாரத ரத்னா விடைகொண்டார்.
போய் வாருங்கள் பிரணாப்!
இந்தியா உங்களை
நீண்டகாலம் நினைக்கும்.
In his distinguished political journey spanning more than 5 decades, Shri Pranab Mukherjee was foreign, defense, commerce and finance minister, before becoming the 13th president of India. He was a politician from a different era. Politics will miss him dearly. pic.twitter.com/qUYhbyrzoV
— Kamal Haasan (@ikamalhaasan) August 31, 2020
பிரணாப் முகர்ஜி மறைவுக்கு
— வைரமுத்து (@Vairamuthu) August 31, 2020
இந்தியா எழுந்து நின்று மெளனிக்கிறது.
உழைப்பில் உறங்காப்புலி இறுதியாய்
உறங்கிவிட்டது.
பாரதத்தின் உயரங்களை வளர்த்தெடுத்த
பாரத ரத்னா விடைகொண்டார்.
போய் வாருங்கள் பிரணாப்!
இந்தியா உங்களை
நீண்டகாலம் நினைக்கும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments