அரசியல் அவரை இழந்துள்ளது, போய் வாருங்கள் பிரணாப்! கமல், வைரமுத்து இரங்கல்

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி சற்றுமுன் உடல்நலக்கோளாறால் காலமானதாக அறிவிக்கப்பட்டது. அவருடைய மறைவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் கவியரசர் வைரமுத்து ஆகியோர் தங்கள் சமூக வலைத்தளங்களில் பிரணாப் முகர்ஜி மறைவு குறித்து தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘இந்தியாவின் 13 வது ஜனாதிபதியாக வருவதற்கு முன்பே வெளிநாட்டு, பாதுகாப்பு, வர்த்தக மற்றும் நிதி அமைச்சராக இருந்தவர் என்பதும், அவர் 5 தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த தனது புகழ்பெற்ற அரசியல் பயணம் செய்தவர். அவர் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி. அரசியல் அவரை இழந்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் கவியரசர் வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் பிரணாப் மறைவு குறித்து கூறியதாவது:

பிரணாப் முகர்ஜி மறைவுக்கு
இந்தியா எழுந்து நின்று மெளனிக்கிறது.

உழைப்பில் உறங்காப்புலி இறுதியாய்
உறங்கிவிட்டது.

பாரதத்தின் உயரங்களை வளர்த்தெடுத்த
பாரத ரத்னா விடைகொண்டார்.

போய் வாருங்கள் பிரணாப்!
இந்தியா உங்களை
நீண்டகாலம் நினைக்கும்.

More News

சூரரை போற்று வருமானத்தில் மாணவர்களுக்காக சூர்யா ஒதுக்கிய மிகப்பெரிய தொகை

சூர்யா நடித்த சூரரை போற்று திரைப்படம் வரும் அக்டோபர் 30ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் மூலம் கிடைத்த வருவாயில் ரூ.5 கோடி நன்கொடையாக கொடுக்கவிருப்பதாக

நயன்தாரா பட இயக்குனரின் அடுத்த படத்தில் 'பாகுபலி' நடிகர்: 3 மொழிகளில் உருவாகிறது!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் படங்களில் ஒன்று 'நெற்றிக்கண்' என்பதும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகும்

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார் 

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார். அவருக்கு வயது 84 . கொரோனா தொற்றால், டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரணாப் முகர்ஜி அவர்கள் சிகிச்சை பலனின்றி காலமானார்

நாளை முதல் தொடங்குகிறது சினிமா படப்பிடிப்பு: வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தது தமிழக அரசு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக திரைப்பட படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று தமிழக அரசு ஒருசில நிபந்தனைகளுடன் சினிமா

பிரசாந்த் பூஷனுக்கு விதிக்கப்பட்ட ஒரு ரூபாய் அபராதத்தை கொடுத்தவர் யார் தெரியுமா?

பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்கள் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் செயல்பாடுகள் குறித்து தனது டுவிட்டரில் விமர்சனம் செய்ததை அடுத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது