இந்தி தெரியாதவர்கள் விலக வேண்டுமா? கமல்ஹாசன், வைரமுத்து ஆவேசம்!

சமீபத்தில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் ஆன்லைன் மூலம் யோகா நேச்சுரோபதி மருத்துவர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழகத்திலிருந்து 37 மருத்துவர்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 350 மருத்துவர்களும் இதில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடாஜா அவர்கள் இந்த பயிற்சியின்போது ஹிந்தியில் பேசினார். அப்போது தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் ஆங்கிலத்தில் உரையாடும்படி கோரிக்கை விடுத்தனர். ஆனால் தனக்கு ஆங்கிலம் சரளமாக தெரியாது என்றும் ஹிந்தி தெரியாதவர்கள் பயிற்சியில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தார்.

ஆயுஷ் அமைச்சக செயலாளரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதுகுறித்து கமல்ஹாசன் மற்றும் வைரமுத்து ஆகியோர் கண்டனம் தெரிவித்து தங்களது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:

கமல்ஹாசன்: ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் தமிழ் புரியாமல் எப்படி எங்கள் மருத்துவத்தைப் புரிந்து கொள்வர் என்ற கேள்வி எழுப்பாதது எம் மருத்துவர்களின் பெருந்தன்மை. அனைவருக்கும் புரியும் மொழியில் இயங்கவேண்டியது அரசின் கடமை. இது இந்தி அரசல்ல. இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம். வாழிய பாரதமணித்திருநாடு.

வைரமுத்து: இந்தி அறியாதார் யோகா பயிற்சியிலிருந்து வெளியேறலாம் என்று இந்திய அமைச்சகச் செயலாளர் அவமதித்திருப்பது அதிர்ச்சி தருகிறது. யோகா இந்திக்கு மட்டுமே சொந்தமா அல்லது இந்தியாவுக்கு
இந்தி மட்டுமே சொந்தமா என்ற கேள்விகள் இதயத்தில் அறைவதை நிறுத்துங்கள்.

More News

வந்தாரை வாழ வைக்கும் சென்னை: சென்னை தின சிறப்பு கட்டுரை

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது தெரிந்ததே. அதேபோல் தமிழகத்தின் உள் மாவட்ட மக்களை குறிப்பாக தென்மாவட்ட மக்களை வாழ வைக்கும் தாய் வீடாக சென்னை இருந்து வருவதை யாராலும் மறுக்க முடியாது.

139 பேர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர்: 25 வயது பெண்ணின் திடுக்கிடும் குற்றச்சாட்டு

25 வயது பெண் ஒருவர் தன்னை கடந்த சில ஆண்டுகளாக 139 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

முதல்முறையாக தளபதி விஜய்யுடன் பணிபுரிகிறார்களா இந்த இரட்டையர்கள்?

தமிழ் சினிமாவில் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டர்களாக இருந்து வரும் அன்பு அறிவு என்ற இரட்டையர்கள் அன்பறிவ் என்ற பெயரில் பல திரைப்படங்களின் பணிபுரிந்து வருகின்றனர்

வாணி போஜனின் அடுத்த படம்: டைட்டில் மற்றும் கதை குறித்த தகவல்

'தெய்வமகள்' உள்ளிட்ட தொலைக்காட்சி சீரியல்களில் நடித்த நடிகை வாணி போஜன், 'ஓ மை கடவுளே' என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்

கறிக்குழம்பு மாதிரி ஜம்முன்னு இருக்கு உங்க கசாயம்: சென்னை சித்தவைத்தியருக்கு பாராட்டு தெரிவித்த சூரி

கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால் உலகமே கொரோனா நோயாளிகளை காப்பாற்ற திணறி வரும் நிலையில் சென்னையை சேர்ந்த வீரபாபு