முதல்ல உங்க துறையை கவனிங்க கமல்: தமிழிசை

  • IndiaGlitz, [Sunday,March 25 2018]

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தற்போது உச்சத்தில் இருந்து வரும் நிலையில் தேவைப்பட்டால் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக களமிறங்க தயார் என கமல் நேற்று தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். கமலின் இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்த கருத்து குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியபோது, 'உங்களை உருவாக்கிய திரைப்பட தயாரிப்பாளர்களின் போராட்டத்தால் திரைத்துறையின் படைப்பாளிகளும் தொழிலாளர்களும் வேலையிழந்து நிற்பது உங்களுக்கு தெரியுமா.? அவர்களுடன் இருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கமல், தமிழிசை டுவீட்டுக்களை அடுத்து கமல் ரசிகர்களும், பாஜக ஆதரவாளர்களும் டுவிட்டரில் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருவதால் டுவிட்டர் இணையதளமே பரபரப்பில் உள்ளது.

More News

ப.சிதம்பரத்தின் டீ-காபி டுவீட்டுக்கு நெட்டிசன்கள் பதிலடி

ப.சிதம்பரம் தனது டுவிட்டரில், 'சென்னை விமான நிலையத்தில் உள்ள 'காபிடே' கடையில் ஒரு டீயின் விலை ரூ.135 என்றும் காபியின் விலை ரூ.180 என்றும் விலையை கேட்டு அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

புரட்சிக் களம் அழைத்தால் வருவேன்: தூத்துக்குடி மக்களுக்கு கமல்ஹாசனின் அறிவிப்பு

கடந்த சில ஆண்டுகளாகவே தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்தம் அடுத்த ஆண்டுடன் முடிவடைகிறது.

விராத் கோஹ்லி: உலகின் மிகச்சிறந்த வீரர் விராத் கோஹ்லியின் வெற்றி ரகசியம்

விராத் கோஹ்லி என்ற பெயரை கேட்டாலே இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு உற்சாகம் வந்துவிடும். அந்த அளவுக்கு அவருடைய ஆட்டத்தில் ஒரு வெறித்தனம் இருக்கும்.

ஹெல்மெட் போடாத வாகன ஓட்டிகளை மிரட்டிய எமன்! அண்ணா சாலையில் பரபரப்பு

இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் போட வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையிலும் அதன் முக்கியத்துவம் தெரியாமல் இன்னும் பலர் ஹெல்மெட் இன்றி இருசக்கர வாகனங்களில் பயணம் செய்து வருகின்றனர்.

ஜெனிவாவில் தனுஷ் பட நாயகியின் திருமணம்

பிரபல நட்சத்திரங்கள் சமீபகாலமாக வெளிநாட்டில் திருமணம் செய்வதை வழக்கமாக்கி வருகின்றனர். சமீபத்தில் விராத்கோஹ்லி-அனுஷ்கா ஷர்மா திருமணம், இத்தாலியில் நடைபெற்றது என்பது தெரிந்ததே