கமல்ஹாசன், ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்த சுப்பிரமணியன்
- IndiaGlitz, [Monday,September 16 2019]
மத்திய உள்துறை அமைச்சர் சமீபத்தில் 'ஒரே நாடு ஒரே மொழி' என்ற கொள்கையில் இருப்பதாகவும், அதற்காக இந்தி மொழியை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் அமித்ஷாவின் கருத்துக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன
இந்த நிலையில் இன்று காலை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட ஒரு வீடியோவில் 'ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது ஒரு சிறிய போராட்டம், ஒரு சிறிய வெற்றி. ஆனால் எங்கள் மொழிக்காக நாங்கள் போராட தொடங்கினால் அதைவிட பன்மடங்கு பெரிதாக இருக்கும். அந்த ஆபத்து இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் தேவையற்றது' என்று மத்திய அரசை எச்சரிக்கும் விதத்தில் குறிப்பிட்டிருந்தார். அதேபோல் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களும் இந்தி திணிப்புக்கு எதிராக தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்.
இந்த நிலையில் இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் முட்டாள்களான கமலஹாசனும் திமுக தலைவர் ஸ்டாலினும் இந்தியை திணிப்பதாக அலறுகிறார்கள். இந்தி மொழியை மூன்றாவது மொழியாக படிக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை மாணவர்களிடம் விட்டுவிடலாம். அவர்களே முடிவு செய்யட்டும்' என்று தெரிவித்துள்ளார்,.