கமல்-ஸ்ரீவித்யா காதல் உண்மையா? இருவரும் மாறி மாறி கொடுத்த பேட்டியின் பழைய வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகம் பல நட்சத்திர காதல்களை பார்த்துள்ளது என்பதும் பல காதல்கள் திருமணத்தில் முடிந்து வெற்றி அடைந்துள்ள நிலையில் சில காதல் திருமணத்தில் முடியாவிட்டாலும் மாறாத வடுவாக நினைவு அலைகளாய் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதும் தெரிந்ததே.
அந்த வகையில் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீவித்யா ஆகிய இருவரும் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் எதிர்பாராத வகையில் பிரிந்து தனித்தனியாக திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் கமல், ஸ்ரீவித்யா காதல் குறித்து இருவரும் தனித்தனியாக அளித்த பேட்டியின் பழைய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கமல் உடனான காதல் குறித்து ஸ்ரீவித்யா பேசியபோது ’நானும் கமலும் காதலித்தது ஒட்டுமொத்த திரையுலகிற்கும் தெரியும். எங்கள் இரண்டு குடும்பத்திற்கும் தெரியும். ஆனால் ஒருநாள் என் அம்மா எங்கள் இருவரையும் அழைத்து உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது, காதல் எல்லாம் வேண்டாம் என்று சொன்னதால் கமலுக்கு கோபம் வந்தது. அதன் பின்னர் அவர் என்னிடம் நீண்ட நாட்களாக பேசவில்லை. திடீரென ஒரு நாள் அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக கேள்விப்பட்டவுடன் நான் அவரை முற்றிலும் இழந்து விட்டேன் என்பதை அறிந்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து கமல்ஹாசன் அளித்த பழைய பேட்டியில் ஸ்ரீவித்யாவுடன் நடித்த படம் குறித்த புகைப்படத்தை குறிப்பிட்டு ’இந்த படம் நடித்துக் கொண்டிருந்தபோது எனக்கு 19 வயது. அப்போது நான் திறமையானவன் என்பதை கண்டுபிடித்த எனது அன்பு தோழி என்று கூறுவதை விட காதலி என்று கூறலாம். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இந்த படத்தில் அமைந்த பாத்திரங்கள் காரணமாக எங்களுக்குள் காதல் மலர்ந்ததா? என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் மறுக்க முடியாமல் இருவருக்கும் அது கடைசி வரை இருந்தது. காதல் கல்யாணத்தில் தான் முடிய வேண்டும் என்று அவசியம் இல்லை, எனக்கு மிகவும் முக்கியமான ஒரு கதாநாயகி’ என்று கமல் தெரிவித்தார். இந்த இரண்டு வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
I Lost Him Forever 💔 pic.twitter.com/55O0leqRff
— Monkey Cinema (@monkey_cinema) December 31, 2023
He himself said it too.. கல்யாணத்தில் முடியாத்தால என்னவோ அந்த காதல் கடைசி வரை இருந்தது..😍❤️.. can feel his love ❤️ https://t.co/JflcOoB2pt pic.twitter.com/ZCjDw6fxfR
— இளவேனில் (@annonymikkame) December 31, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com