கமல்-சிவகார்த்திகேயன் இணையும் படத்தின் கதை இதுவா? ஆச்சரிய தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியின்போது கமல்ஹாசனின் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது என்பது தெரிந்ததே.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. இந்த படம் ஒரு நாட்டுப்பற்று மிக்க படம் என்றும், இந்திய ராணுவம் மற்றும் இந்திய ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள்தான் இந்த படத்தின் ஒன்லைன் கதை என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த திரைப்படம் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளதாகவும், அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயனின் முதல் பான் - இந்திய திரைப்படம் இதுதான் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பறிவ் இணையவுள்ளனர் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் அடுத்தடுத்து இந்த படத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#SK21 will be a patriotic film ??
— Mr. Remo (@MisterRemo_) April 24, 2022
- @anbariv masters pic.twitter.com/8Hy7fwnrHq
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com