'இந்தியன் 2' படப்பிடிப்பில் கமல்-ஷங்கர்: மாஸ் வீடியோ வைரல்!

  • IndiaGlitz, [Thursday,September 22 2022]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று முதல் நடைபெறும் படப்பிடிப்பில் கமலஹாசன் கலந்துகொள்வதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்த நிலையில் சற்றுமுன் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ’இந்தியன் 2’ படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படம் மற்றும் மாஸ் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

அந்த வீடியோவில் கமல்ஹாசனிடம் இயக்குனர் ஷங்கர் அன்றைய தினம் எடுக்க வேண்டிய காட்சியை விளக்கும் காட்சி உள்ளது. இந்த வீடியோவை தற்போது கமல் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

கமல் ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரித்திசிங், ப்ரியா பவானிசங்கர், சித்தார்த், சமுத்திரக்கனி, டெல்லி கணேஷ், பாபிசிம்ஹா, உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.