பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ரஜினி-கமல் சந்திப்பு

  • IndiaGlitz, [Tuesday,January 02 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வருவதை உறுதி செய்து, அதற்கான ஆரம்பகட்ட பணிகளையும் தொடங்கிவிட்டார். அதேபோல் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் ஏற்கனவே அரசியலுக்கு வருவதை உறுதி செய்துவிட்டார். எந்த நேரமும் அவருடைய கட்சி குறித்த அறிவிப்பு வெளிவர வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் வரும் 6ஆம் தேதி மலேசியாவில் நடைபெறும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திரக் கலைவிழாவில் ரஜினி, கமல் இருவரும் பங்கேற்கின்றனர். ரஜினியின் அரசியல் அறிவிப்புக்குப் பின்னர் ரஜினி-கமல் கலந்து கொள்ளும் முதல் விழா என்பதால் இந்த விழாவில் இருவரது பேச்சிலும் அரசியல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இதற்கு முன்னர் ரஜினி-கமல் கலந்து கொண்ட சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழாவில் இருவருமே அரசியல் குறித்து பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதைவிட இந்த விழாவில் அரசியல் கருத்துக்கள் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஆன்மீக அரசியல் இங்கு எடுபடாது: அமைச்சர் கடம்பூர் ராஜூ

திராவிட பாரம்பரியம் மிக்க மண்தான் நமது தமிழகம். திராவிடத்திற்கு மாற்றாக எந்தக் கட்சியும் தமிழகத்தில் ஆட்சிக்கு வருவது இங்கு சாத்தியமில்லை. அதனால் ரஜினிகாந்த்தின் ஆன்மீக அரசியல் எதுவும் இங்கு எடுபடாது,

கன்னடர்கள்தான் கர்நாடகாவை ஆளவேண்டும் என்று கூறினாரா பிரகாஷ்ராஜ்?

நடிகர் பிரகாஷ்ராஜ் சமீபத்தில் பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது, 'கர்நாடகாவை கன்னடர்கள் தான் ஆளவேண்டும் என்று கூறியதாக செய்திகள் வெளிவந்தது.

'தளபதி 62' படத்தில் மீண்டும் 'மெர்சல் மேஜிக்!

'தளபதி 62' படத்திலும் தொடரும் என்று கடந்த சில மாதங்களாக செய்திகள் வந்த நிலையில் தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் 'தளபதி 62' படத்தில் இணைவது உறுதி என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன

அரசியல் அறிவிப்புக்கு பின் ரஜினி சந்தித்த முதல் நபர்

ரஜினிகாந்த கடந்த 31ஆம் தேதி தனது அரசியல் அறிவிப்பை தெளிவாக அறிவித்ததோடு, அதற்கான முன்னேற்பாடுகளையும் தீவிரமாக செய்து வரும் நிலையில் நேற்று அவர் சென்னை மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கு சென்றார்

அரசியல் அறிவிப்புக்கு பின் இணையதளம், செயலியை தொடங்கிய ரஜினிகாந்த்

அரசியல் அறிவிப்புக்கு பின்னர் நேற்று தனது வீட்டின் முன் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை கூறிய ரஜினிகாந்த், நேற்று புதிய இணையதளம் மற்றும் செயலி குறித்த அறிவிப்பு அவர் வெளியிட்டுள்ளார்.