2020 புத்தாண்டு: கமல்ஹாசன், ரஜினிகாந்த் வாழ்த்து

  • IndiaGlitz, [Wednesday,January 01 2020]

2020ஆம் ஆண்டு புத்தாண்டு இன்று முதல் தொடங்கியதை அடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், திரையுலகினர் ஆகியோர் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்றைய புத்தாண்டை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தங்களது டுவிட்டர் பக்கங்களில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

கைகுலுக்கி வாழ்த்து பரிமாறும் ஆண்டு மட்டுமல்ல, கரம்கோர்த்து களமாடும் ஆண்டு. நீ, நான்,நாம் என அனைவரும் இணைந்து களமாடினால்,பாரதி சொன்னது போல வான்புகழ் கொண்ட தமிழகமாக மீண்டும் ஆக்கலாம்.இன்று தொடங்குவது புத்தாண்டு மட்டுமல்ல.நம் வெற்றிப்பயணமும் தான்.நாளை நமதே.புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கமல்ஹாசன் தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதேபோல் ‘அனைவருக்கும் 2020ஆம் ஆண்டின் புத்தாண்டு வாழ்த்துக்கள், கடவுள் ஆசிர்வதிப்பார்’ என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வாழ்த்து டுவிட்டில் தெரிவித்துள்ளார்.