ரஜினி-கமல் நாளை சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பின் கோலிவுட் திரையுலகின் ஜாம்பவன்களான கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் அரசியலில் குதித்துள்ளனர். கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து ஏறத்தாழ ஒருவருட பயணத்தை கடந்துவிட்டார். ரஜினி கட்சி இன்னும் ஆரம்பிக்கவில்லை என்றாலும் அதற்கான ஏற்பாடுகள் 90% முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. எனவே அடுத்த சட்டமன்ற தேர்தலிலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கட்சிகள் தமிழக அரசியலில் ஒரு பெரும் மாற்றத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நாளை மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்படவுள்ளது. இந்த சிலை திறப்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்பட பல தேசிய தலைவர்களும், மாநில தலைவர்களும், ஒருசில மாநில முதல்வர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த நிலையில் இந்த விழாவிற்கு வருகை தரும்படி கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். இருவரும் நாளை இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் நாளை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் இருவரும் பங்கேற்க மாட்டார்கள் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
கமல், ரஜினி ஆகிய இருவருக்குமே கருணாநிதி அவர்கள் நல்ல நண்பராகவும், வழிகாட்டியாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com