ரஜினி-கமல் நாளை சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு

  • IndiaGlitz, [Saturday,December 15 2018]

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பின் கோலிவுட் திரையுலகின் ஜாம்பவன்களான கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் அரசியலில் குதித்துள்ளனர். கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து ஏறத்தாழ ஒருவருட பயணத்தை கடந்துவிட்டார். ரஜினி கட்சி இன்னும் ஆரம்பிக்கவில்லை என்றாலும் அதற்கான ஏற்பாடுகள் 90% முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. எனவே அடுத்த சட்டமன்ற தேர்தலிலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கட்சிகள் தமிழக அரசியலில் ஒரு பெரும் மாற்றத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நாளை மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்படவுள்ளது. இந்த சிலை திறப்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்பட பல தேசிய தலைவர்களும், மாநில தலைவர்களும், ஒருசில மாநில முதல்வர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த நிலையில் இந்த விழாவிற்கு வருகை தரும்படி கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். இருவரும் நாளை இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் நாளை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் இருவரும் பங்கேற்க மாட்டார்கள் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

கமல், ரஜினி ஆகிய இருவருக்குமே கருணாநிதி அவர்கள் நல்ல நண்பராகவும், வழிகாட்டியாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

'கனா' படத்தில் சத்யராஜ் கேரக்டர் அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்துள்ள 'கனா' திரைப்படம் பலத்த போட்டிகளுக்கு இடையே வரும் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது. பெண் கிரிக்கெட் வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ்

பில்லா-தல 59 படங்களுக்கு இடையேயான அபூர்வ ஒற்றுமைகள்

தல அஜித் நடித்த 'பில்லா' திரைப்படத்தின் 11வது ஆண்டு நேற்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அஜித்தின் ஸ்டைலிஷான தோற்றம், நயன்தாராவின் கவர்ச்சி,

'கார்த்தி 18' படத்தில் இணைந்த இளம் இசையமைப்பாளர்

கார்த்தி நடிக்கும் 18வது படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்தது என்பதையும் இந்த படத்தை 'மாநகரம்' படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் என்பதையும் நேற்று பார்த்தோம்.

'தல 59' படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு

தல அஜித் நடிக்கும் அடுத்த படமான 'தல 59' படத்தின் பூஜை இன்று எளிமையாக நடந்து முடிந்தது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

'பெய்ட்டி' புயலால் சென்னைக்கு ஆபத்தா?

டெல்டா மாவட்டங்களை கடந்த மாதம் கஜா புயல் சிதறடித்து போனதன் அடையாளமே இன்னும் அழியாத நிலையில் தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள இன்னொரு புயலால்