அடுத்தடுத்து சில நிமிடங்களில் ட்வீட் பதிவு செய்த கமல்-ரஜினி.. யாருக்கு வாழ்த்து?

  • IndiaGlitz, [Tuesday,September 17 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இருவரும் தங்கள் எக்ஸ் பக்கங்களில் அடுத்தடுத்து சில நிமிடங்களில் ட்வீட்டுகளை பதிவு செய்துள்ளனர்.

இன்று தந்தை பெரியார் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் பிறந்தநாள்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதை ஒட்டி, கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் தந்தை பெரியாருக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர் பதிவில் கூறியிருப்பதாவது:

சமத்துவம், சமூகநீதி, தீண்டாமை, பெண் விடுதலை, பகுத்தறிவு, அரசியல், அறிவியல் என அனைத்திலும் முன்னோக்கிச் சிந்தித்தவர் தந்தை பெரியார். முற்போக்குச் சிந்தனைகளை மக்களின் மனங்களில் விதைக்க தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்ட பெருமகனாரின் பிறந்தநாளில் அவரது கருத்துகளை உள்ளம் ஏந்துவோம்.

இதையடுத்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரதமர் நரேந்திர மோடிக்கு எக்ஸ் பக்கத்தில் தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். ரஜினிகாந்த் தனது பதிவில், மாண்புமிகு பிரதமர் மோடிக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் உடல் நலம் மற்றும் மகிழ்ச்சிக்காக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இருவரின் இந்த ட்வீட்டுகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

More News

தனுஷின் அடுத்த படம்.. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தனுஷின் 50வது திரைப்படமான "ராயன்" சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இதற்குப் பின், அவர் தனது 51வது படமான "குபேரன்

ஓடிடியில் திரையரங்குகளில் வெற்றி பெற்ற,  'டிமான்ட்டி காலனி 2'. எந்த ஓடிடி? என்ன தேதி?

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட தமிழ் திகில் ஹாரர் கிளாசிக்  இரண்டாம் பாகமான  'டிமான்ட்டி காலனி 2' திரைப்படம்,  வரும் செப்டம்பர் 27 அன்று

இது என்ன நாட்டுக்கு முக்கியமான விஷயமா?  வேடிக்கை பார்ப்போம்.. மணிமேகலை பிரச்சனை குறித்து விஜய் டிவி பிரபலம்..!

'குக் வித் கோமாளி'  நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை திடீரென விலகிய நிலையில், இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த சூழலில்,

'மூன்று முடிச்சு' தொடரில் இணையும் இன்னொரு பிரபல நடிகை.. எகிறுமா டிஆர்பி?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "மூன்று முடிச்சு" தொடர், தொடங்கிய இரண்டே வாரங்களில் டிஆர்பியில் ஐந்து இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளது. மேலும், தற்போது

இன்று பெரியார், மோடி பிறந்த நாள்.. விஜய் வாழ்த்து சொன்னது யாருக்கு தெரியுமா?

இன்று தந்தை பெரியார் மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவருக்கும் பிறந்த நாள் என்ற நிலையில், விஜய் தனது சமூக வலைத்தளத்தில் ஒருவருக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.